மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பொருளியல் நிபுணரான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இன்று (04) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றார். 

ஜனாபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிப்பதற்கு கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.