அமெரிக்க வௌ்ளை மாளிகையின் டிஜிட்டல் தந்திரோபாய அலுவலக டிஜிட்டல் துரித வியூக பணிப்பாளர் தன்யா சோமானந்தர் (Tanya Somanader ) இன்று (13) ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலகவைச் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.
ஊடக அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் நாட்டின் தகவல் பரிமாற்றம் தொடர்பாகவும், சமூக வலைத் தளங்களின் தற்போதய நடத்தைகள் தொடர்பாகவும், தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதியமைச்சர் கருணாரட்ண பரணவிதான, அமைச்சின் செயலாளர் நிமல் போபகே, இலங்கைக்கான அமெரிக்க தூதரக தகவல் அதிகாரி ஜோசுவா ஷேன், மற்றும் ஒமர் ராஜரத்மன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.