சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாநிதி ரங்க கலன்சூரிய அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பொதுப்பணிப்பாளர் நாயகமாக நியமனம் பெற்று இன்று(06) தனது பதவிகளை பொறுப்பேற்றுள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளரான இவர் இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் நியமனம் பெற்றுள்ள இவர் இதற்கு முன்னர் சர்வதேச ஊடக நிறுவனத்தில் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
மேலும் தினமின, டெய்லி நியூஸ் பத்திரிகைகளில் பணியாற்றிய இவர், 1990 ஆம் ஆண்டளவில் டெய்லி நியூஸின் துணை செய்தியாசிரியராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
கலாநிதி ரங்க கலன்சூரிய ஊடகவியலாளரும் பிரபல எழுத்தாளருமான காலஞ்சென்ற சோமாதேவி சரணயாப்பா தம்பதிகளின் புதல்வராவார்.