விரைவில் பாராளுமன்றில் தகவல் அறியும் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இடம்பெறவுள்ளது என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத் துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவித்தார தெரிவித்தார்.
நேற்று (04) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பின்னர் குறித்த சட்ட மூலம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அச்சட்ட மூலத்தில் கவனம் செலுத்தக்கூடிய பல அதிகாரங்கள் காணப்படுகின்றன. அதில் பயன்படுத்தபட்டுள்ள வார்தைப் பயன்பாட்டை மாற்றவேண்டியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.