புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூன்று பேருக்கும் பாராளுமன்ற அரசியலமைப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது. அவ்வகையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களான சி.டி.விக்ரமரத்ன. பூஜித் ஜெயசுந்தர மற்றும் எஸ்.எம் விக்ரமசிங்க ஆகியோருக்கு இன்று(18) பாராளுமன்றிற்கு சமூகளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு புதியவரை நியமிக்கும் செயற்பாட்டில் ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்ட மூன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களினதும் தகைமைகளை பரீட்சித்துப் பார்க்க அரசியலமைப்பு சபை தீர்மானித்துள்ளது. அதன்படியே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அரசியலமைப்பு சபை பாராளு­மன்றில் கூடவுள்ள நிலையில் புதிய பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்யும் பணி இடம்பெறவுள்ளது. இன்றைய தினம் அரசியலமைப்பு சபையினால் தெரிவு செய்யப்படும் புதிய பொலிஸ் மா அதிபரின் பெயர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read 3 times