விசேட திட்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம பிரதான உரை நிகழ்த்தவுள்ள இந்நிகழ்வு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவித்தாரண ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது.
ஊடகத்துறை, சினிமா ஆகிய துறைகளில் அமைதியான முறையில் பாரிய பணியாற்றிய கலைஞன் காமினி விஜேதுங்கவை கௌரவப்படுத்தும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி தர்ஷனீ குணதிலக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
காமினி விஜேதுங்கவின் சுயசரிதை அடங்கிய இறுவட்டு மற்றும் நூல் வௌியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.