இலங்கையின் ஊடகத்துறையில் தனது முயற்சியினாலும் திறமையினாலும் மிக முன்னணி இடத்தை வகித்த மறைந்த காமினி விஜேதுங்க அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு இக் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நாளை மறுதினம் (31) பிற்பகல் 04 மணியளவில் நடைபெறவுள்ளது.
ஊடகவியலாளர், கலைஞர் என பல முகங்களை வகிக்கும் இவர் ஊடகத்துறை மற்றும் கலைத்துறையின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பினை ஆற்றியுள்ளார்.
கலை கலாசார பாரம்பரியங்களில் ஆர்வமுள்ள அனைவருக்குமானதொரு திறந்த மடலாக இவ் அழைப்பிதழ் கொள்ளப்படுகிறது. ஆர்வமுள்ள அனைவரும் வருகை தந்து நிகழ்ச்சியை கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.