'பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் பயணம்' என்ற தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தப் பயணத்தில் தென்பகுதி ஊடகவியலாளர்களுக்கும், வடபகுதி ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கான கலாசார நிகழ்வுகள், சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மூன்று ஊடகவியலாளர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்காக அடிக்கல் நடும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. லேக்ஹவுஸ் நிறுவனம் ஒரு வீட்டையும், ரூபவாஹினிக் கூட்டுத் தாபனம் மற்றுமொரு வீட்டையும், சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் மூன்றாவது வீட்டையும் அமைத்துக் கொடுக்கவுள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின்னரும் புலனாய்வுப் பிரிவினரால் தாம் கண்காணிக்கப்படுகின்றோம் என்ற சந்தேகம் வடபகுதி ஊடகவியலாளர்கள் மத்தியில் காணப்படுகிறது.