பொலன்னறுவை மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களின் அபிவிருத்திற்காக வெளிநாட்டு உதவிகளை பெற்றுத்தரும் நோக்கில் 33 நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் நேற்று (14) பொலன்னறுவை மாவட்டத்திற்கு மேற்பார்வை விஜயத்தில் ஈடுபட்டனர்.
யுத்தம் காரணமாக மக்களால் கைவிடப்பட்ட மற்றும் அபிவிருத்தி அடையாத பிரதேசங்களின் அபிவிருத்தியின் பொருட்டே இவர்களின் இவ்விஜயம் அமைந்தது. இத்தூதுவர்களின் விஜயம் மெதிரிகிரிய, மீகஸ்வவ, பிரதேசங்களில் ஆரம்பித்து வதிகவவ, கொடபொத்த மற்றும் பள்ளியகொடல்ல பிரதேசங்களையும் உள்ளடக்கி அமைந்திருந்தது.
மேற்பார்வை விஜயத்தினை மேற்கொண்டிருந்த நாடுகளின் தூதுவர்களுக்கு ஜனாதிபதியினால் மதிய போசனமும் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
ஜப்பான், நெதர்லாந்து, கனடா, ஜேர்மனி, சுவிஸ்லாந்து, மியன்மார், ஈரான், பிரேசில், கொரியா, இத்தாலி, பாகிஸ்தான், எகிப்து, வியட்நாம் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களே இவ் விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.