ஜேர்மன் அதிபர் அஞ்சலா மெர்கலை நேற்று சந்தித்த பின்னர் உரையாற்றிய அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது; நான் உண்மையாகவே மிகவும் ஆரோக்கியமானதும் சிறப்பானதுமான சந்திப்பினை ஜேர்மனியினுடைய அதிபர் கலாநிதி அஞ்சலா மெர்கலுடன் நிறைவு செய்திருக்கின்றேன்.

பல ஆண்டுகளாக இலங்கை மற்றும் ஜேர்மனி நாடுகளுக்களுக்கிடையே நெருங்கிய மற்றும் சுமூகமான உறவுகள் பேணப்பட்டு வந்திருக்கின்றன. என்னை இங்கு அழைத்ததற்காக மட்டுமன்றி இரு நாடுகளுக்குமிடையில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் பல கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்தமைக்காகவும் ஜேர்மன் அதிபருக்கு என்னுடைய நன்றிகளை தொிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கை மற்றும் ஜேர்மனிக்கிடையிலான உறவானது இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலானது. ஜேர்மனியில் புத்த மதத்தின் வரலாறானது 150 வருடங்களுக்கும் மேலானதாகும். வணக்கத்துக்குாிய நயனதிலோகா என்ற புத்த துறவியே ஜேர்மனியிலிருந்து இலங்கை வந்து வாழ்ந்த முதலாவது துறவியாவார். அவரை முன்னுதாரணமாகக் கொண்டே ஏனைய ஐரோப்பிய பெளத்த துறவிகள் தேரவாத பெளத்த சமயத்தினை செழிப்படையச் செய்வதற்கு தங்களுடைய மகத்தான பங்களிப்பினை வழங்கியிருந்தார்கள்.

ஜேர்மன் அதிபருடனான எமது கலந்துரையாடலானது இலங்கைக்கான ஜேர்மனின் அபிவிருத்தி உதவிகள் தொடர்பாக அமைந்திருந்தது. கடந்த 5 தசாப்தங்களுக்கும் மேலாக எமக்கு அபிவிருத்தி தொடர்பான உதவிகளை மேற்கொண்டுவரும் ஜேர்மன் அரசாங்கத்திற்கு நான் இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளை கூறிக்கொள்கின்றேன். அத்துடன் எதிர்காலத்திலும் தொடர்ந்து இந்த உதவிகளை வழங்கும்படியும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் எமது அரசாங்கமானது புதிய துறைகளில் பன்முகப்படுத்தப்பட்ட ஒத்துழைப்புடன்கூடிய நீண்டகால அடிப்படையிலான புதிய வாய்புக்களை தேடும் முயற்சியில் உறுதிபுூண்டுள்ளது.

இலங்கையில் ஜேர்மன் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறைப் பயிற்சி நிறுவனத்தை ஸ்தாபித்து அதனுௗடாக திறன் வளர்ச்சியினை மேம்படுத்த ஜேர்மன் அரசு மேற்கொண்டுவரும் பங்களிப்பானது ஒரு சிறந்த முன்மாதிாியாக காணப்படுகின்றது. அந்தவகையில,் நாம் எமது நன்றிகளை ஜேர்மன் அரசாங்கத்திற்கும் ஜேர்மன் மக்களும் இச்சந்தர்ப்பத்தில் தொிவித்துக் கொள்கின்றோம்.

இலங்கையில் தற்போது அதிகாித்துவரும் பொருளாதார வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ள ஜேர்மன் முதலீட்டாளர்களுக்கு நாம் இச்சந்தர்ப்பத்தில் அழைப்புவிடுக்கின்றோம். என்னுடைய இந்த விஜயத்தில் ஒரு உயர்மட்ட வர்த்தக முதலீட்டு தூதுக்குழு இணைந்துள்ளது.

நாம் இலங்கையின் பொருளாதார வாய்புக்கள் மற்றும் சாத்தியமான திறன்கள் தொடர்பான விழிப்புணர்வினை உருவாக்க ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள விசேட மாநாட்டில் பங்குபற்றவும் உள்ளோம். எம்முடைய வணிக தூதுக்குழுவினர் ஜேர்மனின் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடி கூட்டுமுயற்சி வாய்ப்புக்களை அடையாளம் கண்டறியவுள்ளனர்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு மேலதிகமாக எம்முடைய மேம்பட்ட கூட்டுறுவானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நிலையான வளர்ச்சியில் அமைந்த எாிசக்தித் துறை மற்றும் உயர்கல்வி ஆகியவற்றினை பரந்துபட்ட ாீதியில் உள்ளடக்கியதாக அமையும்.

என்னுடைய, இந்த விஜயத்தின்போது ஜேர்மனியின் சமஷ்டி ஜனாதிபதி துழயஉாஅை புயரஉம அவர்களை சந்திக்கவிருக்கின்றேன். அவருடனான சந்திப்பு மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தின் உயரதிகாாிகளுடனான என்னுடைய சந்திப்பானது எம்முடைய இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு மற்றும் பல்தரப்பு ாீதியிலமைந்த பகிர்ந்துகொள்ளக்கூடிய வாய்ப்புக்களை அடையாளம் காண்பதற்கும் அவற்றை எம்முடைய முன்னுாிமைகள் மற்றும் திறன்களின் அடிப்படையில் ஊக்குவிப்பதற்கு உதவியாக அமையும் எனவும் நான் உறுதியாக நம்புகின்றேன்.