பேர்லினில் அமைந்திருக்கும் ஹோலோகாஸ்ட் நினைவுச் சின்னமானது கட்டிடக் கலைஞர் பீட்டர் ஈஸ்ன்மென் (Peter Eisenman) மற்றும் பொறியியலாளர் பூரோ ஹப்போல்ட் (Buro Happold) ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட ஹோலோகாஸ்ட்டால் பாதிக்கப்பட்ட ஏறாத்தாழ 3 மில்லியன் யூதர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட ஞாபகார்த்த சின்னமாகும்.

இந்த நினைவுக் கட்டிடமானது 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி கட்ட ஆரம்பிக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கட்டி முடிக்கப்பட்டது. அத்தோடு இரண்டாம் உலக மகா யுத்தத்தின் 60 ஆவது ஆண்டினை நினைவுகூரும் முகமாக 2005 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதோடு இரண்டு நாட்களின் பின்னர் மக்கள் பார்வையிடுதலுக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, தயா கமகே, மலிக் சமரவிக்கரம மற்றும் மகிந்த சமரசிங்க ஆகியோரும் இணைந்திருந்தனர்.