இந்தியா - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 09 ஆவது அமர்வில் பங்குகொள்ளும் பொருட்டே எதிர்வரும் 05 ஆம் திகதி வருகைதரவுள்ள இவர் 06 ஆம் திகதி வரையான இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார்.

இந்தியா - இலங்கை கூட்டு ஆணைக்குழுவுக்கு இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இணைத்தலைமை வகித்து வருகின்றனர். இவ் ஆணைக்குழுவின் 09 ஆவது அமர்வு எதிர்வரும் 05 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

இவ் ஆணைக்குழுவின் 08 ஆவது அமர்வு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி புதுடில்லியில் நடைபெற்றது. எதிர்வரும் 05 ஆம் திகதி மாலை வருகை தரவுள்ள சுஷ்மா சுவராஜ் 06 ஆம் திகதி மாலை இலங்கையிலிருந்து இந்தியா நோக்கி புறப்படுவார் எனவும், அதற்கிடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, வையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுவடுவார் எனவும் வௌிவிவகார அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.