பொதுநலவாய அமைப்புக்களின் பொதுச்செயலாளர், பொதுநலவாய அமைப்புக்களின் பாராளுமன்ற சங்கம் ஆகியன இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

இன்று (01) தொடக்கம் எதிர்வரும் 3ஆம் திகதி வரை நடைபெறும் இம்மாநாட்டில் பங்களாதேஷ், இந்தியா, மலேஷியா, மாலைதீவு, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

மனித உரிமை பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி என்பவற்றின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கு என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இம்மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.