வேகமாக வளர்ந்து வரும் தொற்றாத நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆலோசனைக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சு இவ்விளையாட்டு வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள தேசிய வாரத்தின் முதலாவது நாளான இன்று அனைத்து அமைச்சு, திணைக்களம், கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் பல்வேறு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.