இந்த மாநாடு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை இலங்கை மீது திருப்புவதற்கு இம்முறை மாநாடு உதவியாக அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பொருளாதாரத்தின் புதிய முன்னேற்றங்கள், பிரவேசங்கள் தொடர்பாக இந்த மாநட்டில் ஆழமாக ஆராயப்படவிருக்கின்றது. சுமார் 40 நாடுகளின் தலைவர்களும், 2500 பொருளாதார நிபுணர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

உலகத் தலைவர்களின் கருத்துப் பரிமாறல்களூடாக திட்டங்களை ஒருமுகப்படுத்திக் கொண்டு பூகோள மற்றும் பிராந்திய பொருளாதார நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதில் மாநாடு முக்கிய கவனம் செலுத்தவுள்ளது.

இம் மாநாட்டில் கலந்து கொள்ளவென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அபிவிருத்திச் செயற்பாடுகள், சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ஆகியோர் நேற்று சுவிஸ்லாந்து நோக்கி பயணமாகியிருந்தனர்.