உத்தியோகபூர்வமாக இரண்டுநாள் விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜெய்சங்கர் 12 ஆம் திகதி நாட்டினை வந்தடைந்தார்.

மேற்கொண்டிருந்த இரண்டு நாள் விஜயத்தின் போது இந்திய வௌிவிவகார செயலாளர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சின் செயலாளர் சித்திராங்கனி வகீஸ்வரா, அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம எனப் பலரையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இரண்டு நாடுகளுக்கிடையிலும் உள்ள பரஸ்பர வர்த்தகம், நீண்டகால வரலாறு, மற்றும் நட்புறவு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது