நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கிய மக்களின் வெற்றியை கொண்டாடும் 'மைத்திரி ஆட்சி, நிலையான நாடு' என்ற தொனிப்பொருளில் இன்று (08) தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்வின் போது 'ஒரே நாடு- மிகப்பெருஞ்சக்தி என்ற நூல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

மேலும் ஐநா செயலாளர் நாயகத்தின் செய்தியை இலங்கைக்கான ஐநா நிரந்தர பிரதி பிரதிநிதி சுபினே நந்தி வழங்கவுள்ளார்.

இத்தேசிய நிகழ்வின் வரவேற்புரையை இந்திய மேற்கு வங்காள ஆளுநர் மற்றும் இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் கிருஷ்ணா காந்தி ஆற்றவுள்ளார்.