பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸின் அழைப்பை ஏற்று ரோமுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ப்யூமிஸினோ விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

ஜனாதிபதியுடன் முதல் பெண்மணி ஜயந்தி சிறிசேனவும் இவ்விஜயத்தில் பங்கேற்றுள்ளதுடன் ப்யூமிஸினோ விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி தம்பதியினருக்கு வத்திக்கானின் பொது செயலகத் தலைவர் ஜோஸ் ஸட்டர்ன் கோர்ட் இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதுவர் தயா ஸல்ஸால, வத்திக்கானுக்கான தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க ஆகியோர் மகத்தான வரவேற்பளித்தனர்.

அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர் பெருமளவிலானோர் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்ததுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் கலந்துரையாடினர்.

நேற்றைய தினம் சந்திக்கானின் புனித டெமஸ்கோ பூங்காவில் பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தையைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனையடுத்து வத்திக்கானின் ராஜாங்க செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.