உள்ளூராட்சி சேவையை ஒழுங்கமைக்க வேண்டும் , நாட்டின் மாகாணசபை நிறுவனங்களை செயற்படுத்து முறையான தகைமை வாய்ந்த அதிகாரிகளை மீண்டும் அரச சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்று ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவித்தாரன இன்று (08) பாராளுமன்றில் தெரிவித்தார்.

மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு என்பவற்றின் மீதான குழுநிலை விவாத்தில் இணைந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மாகாணசபை நிர்வாகத்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட ​வேண்டுத். புதிய மாற்றத்துடனேயே மாகாணசபை தேர்தல் நடைபெறும்.எல்லை நிர்ணயம் இன்னமும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. எல்லை நிர்ணயம் செய்து முடித்தாயிற்று. அடுத்த துயரத்தை கேட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் செயற்பாடு நிறைவடைந்த பினனர் தேர்தல் நடைபெறும்.

பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும், எதிர்வரும் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பான சட்டமூலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும் எதிர்பார்த்துள்ளோம். தற்போது அதற்கு அமைச்சவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. சட்டமூலம் தற்போது தயாரிக்கப்படுகிறது. எதிர்வரும் தேர்தலில் புதிய விதிமுறைகளுடன் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு உறுதிப்படுத்தப்படும் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.