வெலட்டாவில் உள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் ஊடக மத்திய நிலையத்தில் இன்று (26) நடைபெற்ற மோல்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் அவர்களுடன் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின் பின்னரே இதனைத் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்த திரு.கமலேஷ் சர்மா, ஜனநாயகம், மனித உரிமைகள், கணக்கு கூறும் தன்மை போன்ற பொதுநலவாய கொள்கைகளை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி சிறிசேன அவர்களின் அர்ப்பணிப்பு குறிப்பிடத்தக்கதாகும் எனக் குறிப்பிட்டார்.

பொதுநலவாய நாடுகளின் தலைவர் என்றவகையில் ஜனாதிபதி சிறிசேன அவர்கள் பொதுநலவாய செயலகத்திற்கு முடியுமான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கியது மட்டுமன்றி, ஐக்கிய நாடுகள் சபை பொதுச்சபைக் கூட்டத் தொடரில் அவரின் உரையின்போது, பொதுநலவாய கொள்கைகளை மேம்படுத்துவதற்கு கணிசமான நேரத்தை எடுத்துக்கொண்டார் என்றும் தெரிவித்தார்.

பொதுநலவாய தலைவர் என்ற வகையில் இலங்கை ஜனாதிபதி அவர்கள் தனது பொறுப்புக்களை மிகுந்த அர்ப்பணத்தோடு நிறைவேற்றியதோடு, அப்பொறுப்பை கையளிப்பதற்காக மோல்டா வருகிறார் என்றும் திரு சர்மா சுட்டிக்காட்டினார்.

அவரோடு பணியாற்றக் கிடைத்தமை உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாளை வரலாற்று முக்கியத்துவமிக்க போட் சென் எஞ்சலோவில் நடைபெறும் பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களும் மோல்டா வருகிறார் என்ற செய்தியையும் திரு சர்மா அறிவித்தார்.

இந்த உச்சி மாநாட்டின் முக்கிய இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் காலநிலை மாற்றம் தொடர்பான கூட்டத் தொடரில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உரையாற்ற உள்ளார்.

உலகெங்கிலும் இருந்து 53 அரச தலைவர்கள் பங்குபற்றும் இந்த நிகழ்வு இன்னும் ஒரு வாரத்தின் பின்னர் நடைபெற உள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பரிஸ் உச்சி மாநாட்டிலும் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் இருந்து தலைமைப் பதவியை தாம் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் இந்த அமைப்பை பொதுநலவாய நாடுகள் என்பதை பார்க்கிலும் ஒரு மக்கள் பொதுநலவாய அமைப்பாக ஆக்கும் தொலைநோக்கத்துடன் செயற்பட உள்ளதாக மோல்டா பிரதமர் திரு.ஜோசப் மஸ்கட் தெரிவித்தார்.