இச்சந்திப்பின் போது இலங்கை ஊடகவியலாளர்களுக்கு கொரிய நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு புதிய அனுபவங்களையும் அந்நாட்டு கலை கலாசார விடயங்களையும் வழங்குவது தொடர்பிலும் கொரிய ஊடகவியலாளர்களுக்கும் அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி இலங்கை விஜயம் செய்யவும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது அமைச்சர் கயந்த கருணாதிலக்க அரசாங்க உத்தியோகப்பூர்வ இணையதளத்திற்கு தெரிவித்தார்.

மேலும் பாடசாலை மாணவர்களின் ஊடக அறிவை மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கான உதவிகள் வழங்குமாறு தான் வேண்டுகோள் விடுத்ததாகவும் அத்திட்டத்திற்குதவ மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக கொரிய தூதுவர் தெரிவித்தார் என்றும் குறித்த திட்டத்திற்கான அறிக்கையை தூதுவர் விரைவில் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்றும்அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் இருநாடுகளின் கலாசாரங்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக இலவசமாக மற்றும் குறைந்த அளவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பரிமாறிக்கொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.