நிறைவேற்று அதிகார முறைமையை நீக்கி, அதன் அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்குதல் மற்றும் புதிய தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான யாப்புத் திருத்தங்களையே இந்த அமைச்சரவை பத்திரத்தினூடாக ஜனாதிபதி முன்மொழிந்திருந்தார்.

அந்த முன்மொழிவின்படி பிரதமரின் பங்குபற்றுகையுடன் இது தொடர்பாக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கும் அந்த உப குழுவினூடாக எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் அமைச்சரவைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்கும் அதன் பின்னர் சட்ட வரைபு அதிகாரிகளுனூடாக சட்ட வரைபை மேற்கொள்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளில் இது தொடர்பில் கரிசனை காட்டும் ஏனைய அரசியல் குழுக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் கவனத்திற்கொள்ள உபகுழு நடவடிக்கை எடுக்குமென ஜனாதிபதி எதிர்பார்க்கின்றார்.