இவ்விண் பொருளை அவதானிக்க விரும்புபவர்கள் குறித்த நேரத்திற்கு இரண்டு மூன்று மணித்தியாலயங்களுக்கு முன்பிருந்தே அவதானிக்க ஆரம்பிப்பது அவசியம் என்று விஞ்ஞானம், தொழில் நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சு மேலும் குறிப்பிட்டதாவது விண்வெளிக்கு ஏவப்பட்ட ரொக்கட் ஒன்றின் பாகம் இன்று (13ம் திகதி) முற்பகல் 11.45 மணியளவில் நாட்டின் தென் பகுதிக் கடலில் சுமார் 62 கடல் மைல்கள் தூரத்தில் விழவிருப்பதாக கண்டறியப்பட் டுள்ளது.

இது மனிதனால் விண்வெளிக்கு ஏவப்பட்ட ரொக்கட் ஒன்றின் பாகமாகும். சில நேரம் இது 1960, 70 தசாப்தங்களில் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட அப்பலோ விண்கலத்தின் பாகமாகவும் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இந்த விண் பொருள் இரண்டு மீற்றர்கள் அதாவது 6.5 அடிகள் அளவைக் கொண்டது. இப்பாகம் அவதானிக்கக் கூடியளவு வெளிச்சத்துடன் கடலில் விழுமென ஐரோப்பிய விண்வெளி முகவரகத்தின் பூகோளத்திற்கு அண்மையில் காணப்படும் விண் பொருட்களை ஆய்வு செய்யும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்விண் பொருட்கள் வளிமண்டலத் திற்குள் பிரவேசித்ததும் அதன் பெரும்பகுதி அரிந்து விடும். எஞ்சுபவையே கடலில் விழும் சில சமயம் அவையும் கடலில் விழ முன்னர் எரிந்து விடவும் முடியும்.

இது இயற்கையான விண் பொருள் அல்ல இது ரொக்கட் ஒன்றின் பாகமே என்பதை அதன் பயண வேகத்தை வைத்து மேற்படி மத்திய நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. விண் பொருளொன்று வளிமண்டலத்தினுள் பிரவேசிப்பதையும், வளியுடன் உராய்வு அடைவதையும் விஞ்ஞானிகள் அவதானிப்பதற்கு கிடை க்கும் அரிய சந்தர்ப்பமே இது.

ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மிகவும் சிறிய விண் பொருட்கள் விண் வெளியில் காணப்படுவதையும் 04 அங்குலங்களுக்கு மேற்பட்ட சுமார் 20 ஆயிரம் விண் பொருட்களும் விண்வெ ளியில் காணப்படுவதை நாசா விண் வெளி ஆய்வு மையம் அவதானித்துள்ளது.

இந்த விண் பொருட்களின் வேகம் மணித்தியாலயத்திற்கு 17,500 மைல்களாகவோ அல்லது அதை விடவும் அதிகமாகக் காணப்படுகின்றது.

இவ்வாறு வேகமாக பயணிக்கும் இச்சிறிய விண் பொருட்களால் கூட விண் ஓடத்தையோ அல்லது செய்மதியையோ பாதிக்க முடியும்.

அதனால் இவ்வாறான அச்சுறுத்தலிருந்து விண் கலங்களும் குறிப்பாக சர்வதேச விண்வெளி மத்திய நிலையமும் எவ்வாறு தவிர்ந்து கொள்ளலாம் என்பது குறித்து நாசா நிறுவனம் தொடர்ந்தும் ஆய்வு செய்து வருகின்றது.