அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று (11) நடைபெற்ற சோபித்த தேரரின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களை தௌிவுபடுத்தும் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சோபித்த தேரரின் பூதவுடல் நாளை (12) நன்பகல் 12 மணிவரை மக்கள் அஞ்சலிக்காக கோட்டை நாகவிகாரையில் வைக்கப்பட்டிருக்கும். பூதவுடலை தாங்கிய இறுதி ஊர்வலம் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகும். இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவுள்ள விரும்புவர்கள் பிற்பகல் 1.30 மணிக்கு முதல் நாகவிகாரையயை வந்தடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பூதவுடலை தாங்கிய பேழை பிற்பகல் 3.00 மணிக்கு பாராளுமன்ற மைதானத்தை வந்தடையும். அதன் பின்னர் இறுதி கிரியைகள் நடைபெறவுள்ளது.

நாளைய தினம் (12) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையினால் அனைத்து அரச நிறுவனங்களும் அரை கம்பத்தில் தேசிய கொடியை பறக்கவிடுமாறும் வீடுகள், கடைகள், தனியார் இடங்களில் மஞ்சள் கொடியை பறக்கவிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் நாளை அனைத்து மதுபான விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மேல் மாகாணத்தில் அனைத்து திரையரங்குகள் மூடப்படும். நாட்டின் அனைத்து பிரிவனக்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் இறுதிக்கிரியைகள் தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒலிபரப்பப்படும். தேசிய ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் நேரடி வர்ணணை வழங்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.