இன்று (09) ஊடக அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்த தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் இயற்கை எய்திய மாதலுவாவே சோபித தேரரின் உடல், இன்று (09) காலை கோட்டே ஶ்ரீ நாக விகாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அன்னாரின் உடல் இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை (12) வரை மக்கள் அஞ்சலிக்காக கோட்டே ஶ்ரீ நாக விகாரையில் வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் தேகத்திற்கு பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பௌத்த மக்களிடத்தில் மாத்திரமன்றி அனைத்து மக்களிடத்திலும் கௌரவத்தினை பெற்றுகொண்ட மாதுலுவாவே சோபித தேரர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பாடுபட்டார். அன்னாரின் மறைவினையடுத்து, எதிர்வரும் 12 ஆம் திகதி தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொண்ட பௌத்த தேரர்கள் கருத்து தெரிவிக்கும் போது மாதலுவாவே சோபித தேரர் மிகவும் கருணையுள்ளத்தோடு மக்களின் நலனுக்காக இறைவழியில் பணியாற்றிய ஒருவராவார். அவர் இதிகாசங்களில் கூறப்படுகின்ற கருணை வடிவானவர். தனிப்பட்ட நோக்கங்கள் நலன்களை விடுத்து மக்களின் சமூக நலனுக்காக தனது துறவற வாழ்வில் 53 வருடங்கள் பணியாற்றியவர் எனவும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, மகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பொதுப்பணிப்பாளர் கலாநிதி தர்ஷனி குணதிலக்க, ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி கே.டபிள்யூ.ரி.என் அமரதுங்க, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி.ருவான் குணசேகர, மற்றும் ஊடக நிறுவனத் தலைவர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.