அவரது பூதவுடலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா அநுர குமாரதிஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதத்தலைவர்கள் நேற்று (09) திங்கட்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

சுகவீனமுற்ற நிலையில் சிங்கபூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சோபித்த தேர் கடந்த 8ஆம் திகதி காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுநாள் பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளதுன் அன்றை தினம் தேசிய துக்க தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.