இத்திரைப்பட விழாவில் நாளை தொடக்கம் (07) எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் உலக சினிமாவில் முத்திரை பதித்த சுமார் நூறு திரைப்படங்கள் வௌ்ளித்திரையில் காண்பிக்கப்படவுள்ளது.

ஆரம்ப தினமான இன்று உலக புகழ் பெற்ற பிரெஞ்சு இயக்குநர் ஜெக் ஒடியட் இயக்கிய கேன்ஸ் கோல்டன் பால்ம் விருது பெற்ற 'தீபன்' திரைப்படம் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

'நீங்கள் வந்து நிறையுங்கள்" என்ற தொனிப்பொருளில் இம்முறை கொழும்பு திரைப்படவிழா நடைபெறவுள்ளது.

இதேவேளை, இத்திரைப்பட விழாவையொட்டி இலங்கை சினிமா துறையின் ஆரம்பகாலம் தொட்டு இன்று வரையில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் இன்று தொடக்கம் எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. மேலும் சினிமா தொடர்பான நூல்கள் வௌியிடப்படவுள்ளதுடன் விவரணச் சித்திர கண்காட்சி, மேக் அப் தொடர்பான உத்திகள், கலை நிர்மாணங்கள் மற்றும் இசை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெறவுள்ளன.

அத்துடன் இலங்கை இயக்குநர்களின் திறமையை மதிப்பீடு செய்வதற்காக 2015ஆம் ஆண்டு தொடக்கம்' இலங்கையின் புதிய சினிமாவின் வளர்ச்சி' என் தலைப்பிலான போட்டியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. NETPAC ஊடாக தெரிவு செய்யப்பட்ட ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கு 'நாளைக்கான சினிமா விருது' வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.