சீன கம்யூனிஸ கட்சியின் பிரதித் தலைவரும் சீன தேசிய மக்கள் காங்கிரஸ் நிலையியற் குழுவின் பிரதித் தலைவருமான சாங் பாஓவென் (Mr Zhang Baowen) உள்ளிட்ட சீன கம்யூனிஸ கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் நேற்று (20) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த வேளையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

‘இன்று கொழும்பு முதல் நாட்டின் நாலா திசையிலும் பயணிக்கின்ற போது சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்திக் கருத்திட்டங்களை நாம் காண முடியும்’ என ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதில் எதிர்காலத்திலும் இலங்கை அரசாங்கம் சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மேலும் நாட்டில் வறுமையை ஒழித்துக்கட்டுவதற்கும் சீன அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பை தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இலங்கைக்கும் சீனவுக்குமிடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சீன கம்யூனிஸ கட்சிக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் இரு தலைவர்களும் விசேடமாக கலந்துரையாடினர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கின்ற போதெல்லாம் அரசாங்கத்திற்கும் கம்னியூஸ கட்சிக்குமிடையிலான உறவுகள் பலம் அடைந்திருப்பதையும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார். சர்வதேச மன்றங்களில் சீனா இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான உதவிகளுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை பலப்படுத்துவதற்கு இலங்கையில் உள்ள சீன தூதுவரின் ஒத்துழைப்புகளுக்கும் ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்தார். இந்நிகழ்வில் திரு. சாங் பாஓவென் ஒரு நினைவுச் சின்னத்தையும் ஜனாதிபதியிடம் கையளித்தார்.