ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முயற்சியினால் இத்தீர்மானம் ஏற்கப்பட்டு தற்போது 192ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் தேசிய உணவு உற்பத்தி திட்டத்தை 2016 – 2018 காலப்பிரிவினுள் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்காக 15,595 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தை 2015ம் ஆண்டின் பெரும்போக செய்கையுடன் ஆரம்பித்து 2016 – 2018 வரையிலான இடைப்பட்ட காலப்பகுதியில் முன்னெடுக்க ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.