இலங்கை பத்திரிகைப் பேரவையின் 60வது நிறைவு விழா கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற போது அங்கு உரையாற்றிய அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் பத்திரிகை வரலாற்றை நோக்கும் போது உலகில் பத்திரிகை வெளி வந்து நூறு வருடங்களுக்குப் பின்னரே இலங்கையில் பத்திரிகை வெளிவந்தது. அப்போதும் முறையான ஊடக அமைப் பொன்று செயற்பட்டதில்லை.

அத்தகைய சூழலில் எமது நாட்டின் சில ஊடகவியலாளர்களின் முயற்சியில் இந்த சங்கம் உருவாக்கப்பட்டு செயற்படுத் தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிற்றம்பலம் கார்டினர், ஈ.பி. தனபால, ரெஜிமைக்கல், ஈ.எம். காரியக்கரவன போன்றோர் இதில் எப்போதும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள்.

இதில் காரியக்கரவனவின் பெயர் குறிப்பிடத்தக்கது. அவர் பல பதவிகளை ஊடகத்துறையில் வகித்துள்ளார். அவரது மூன்று பரம்பரை ஊடகத்துறைக்கு அர்ப்பணிப்புள்ள சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத் தக்கது. அவர் எழுதியுள்ள நூல்கள் வளர்ந்து வரும் இளைய ஊடகவியலா ளர்களுக்கு சிறந்த கையேடாக அமைகிறது.

கடந்த தசாப்தமானது ஊடகத்துறை பெரும் வளர்ச்சி பெற்றுள்ள காலமாகும். பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, சமூக இணையத்தளங்கள் என அவை தொடர்ந்துள்ளன.

கடந்த ஆட்சிக்காலத்தில் ஊடகவிய லாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் எதிர்கொள்ள நேர்ந்த அசெளகரியங்கள் அனைவரும் அறிந்ததே. கடந்த ஜனவரி 8ம் திகதி இந்த நாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்ற போது நாட்டில் ஊடக சுதந்திரம் பெரும் சவாலை எதிர்நோக்கியிருந்தது என்பதை சகலரும் அறிவர்.

ஊடக சுதந்திரம் அதள பாதாளத்தில் தள்ளப்பட்டு கருப்புக்கறை படிந்ததாகக் காணப்பட்ட யுகம் அது. தற்போது ஊடகங்களோடு எப்போதும் சுமுகமான தொடர்பைக் கொண்டிருந்த ஜனாதிபதி நாட்டின் தலைவராக உள்ளார்.

இப்போது வெள்ளை வேன் விவகாரம் நாட்டில் கிடையாது. ஊடகவியலாளர் தாக்கப்படுவதில்லை. அல்லது படுகொலை செய்யப்படுவதில்லை.

அச்சுறுத்தல் தாங்காமல் ஊடகவிய லாளர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளனர் என்ற செய்திக்கும் இடமி ல்லை. பேனையை சுதந்திரமாக உபயோ கிக்கும் சூழல் நாட்டில் நிலவுவதால் வெளிநாடுகளிலிருந்தவர்கள் மீள நாடு திருபுவதையே காண முடிகிறது. ஊடக அமைச்சரிடமிருந்து தொலைபேசி மூலம் ஏதாவது அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூட அறிய முடியவில்லை. அத்தகைய சூழல் நாட்டில் நிலவுகிறது.

நாம் ஊடகவியலாளர்களின் நலன்புரித் திட்டங்கள் பலதை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம். ஊடகவியலாளரின் கனவுகளில் வீடு முக்கியமானது. சில ஊடகவியலாளர்கள் விடுதிகளிலும், விகாரைகளிலும் தங்கியிருந்து பணிபுரிவதைக் காண முடிகிறது. அவர்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்கும் திட்டம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

அமைச்சரவையில் இது தொடர்பான பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாம் ஆரம்பிக் கவுள்ளோம். அதேபோன்று இறக்குமதி வரியற்ற ரீதியில் மோட்டார் சைக்கிள்களை வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப் படவுள்ளது.

அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். மேற்படி நிகழ்வில் இந்திய ஊடகவியலாளர்கள் குழுவொன்றும் கலந்து கொண்டதுடன் சிரேஷ்ட ஊடக வியலாளர்கள் 10 பேர் கெளரவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டனர்.

பிரதியமைச்சர் கரு. பரணவிதாரணவும் இந்நிகழ்வில் உரையாற்றினார்.