நேற்று (21) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புத்தசாசன அமைச்சும் களனி பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பாடல் திணைக்களமும் ஒழுங்கு செய்திருந்த "எதிர்காலத்திற்காக அநகாரிக்க தர்மபாலவின் நோக்கு" எனும் கருப்பொருளின் கீழ் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துரையாற்றிய ஜனாதிபதி, வரலாற்றில் அநாகரிக்க தர்மபாலவின் சுவடுகளை நாம் கற்கும் போது அவர் எதிர்கொண்ட சவால்கள், தடைகள் என்பவற்றினை கண்கூடாக அறிந்து கொள்ளலாம். சிலவேளைகளில் சமூகத்தவர்களால் விமர்சிக்கப்படும் ஒருவாராகவும் அவர் மாறியிருந்தார். ஆன போதும் அவரால் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள் எண்ணங்கள் தற்போதும் அனைவராலும் மதிக்கப்படும் ஒன்றாகவுள்ளது. இன்றைய சமுகத்தில் வாழும் பல தலைவர்கள் கூட அவரது வழியை அடித்தளமாக கொண்டு சிறந்த சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி , அடுத்த ஆண்டு அநாகரிக்க தர்மபாலா வாரத்தினை நாம் பிரகடணம் செய்யும் முன்னர் அவரது சிறந்த கொள்கைகள், நோக்குகளை நகரத்திலிருந்து கிராம மக்கள் அனைவருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். அதுமட்டுமன்றி பாடசாலை மாணவர்கள், இளைய சமுதாயத்தினர் மத்தியிலும் அவரது எண்ணங்களை பரவி நல்லதொரு சமுதாயத்தினை வளர்க்க உறுதுணையாக இருக்க வேண்டுமென நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களிடம் வேண்டுகோளொன்றினையும் விடுத்தார்.

நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அநாகரிக்க தர்மபாலவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, மற்றும் சமய தலைவர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.