ஜேர்மன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் பிராங் - வோல்ரர் ஸ்டீன்மியேர் (Dr. Frank-Walter Steinmeier) உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நாளை (22) செவ்வாய்க்கிழமை இலங்கை வரவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர் . சம்பந்தன் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன் கிளிநொச்சியில் நிறுவப்பட்டு வரும் இலங்கை - ஜேர்மன் பயிற்சி நிலையத்தினையும் பார்வையிடவுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடன் ஜேர்மன் இணைந்து நிர்மாணிக்கும் பயிற்சி நிலையம் எதிர்வரும் மே மாதத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.