இன்று (15) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தபோதே ஐ நா பிரதிநிதி இதனைத் தெரிவித்தார்.

2015 செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி நியுயோர்க் நகரில் நடைபெற உள்ள ஐ நா பொதுச் சபையின் 70வது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் தான் கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சகல சர்வதேச கடப்பாடுகளையும் தொடர்ந்தும் பேணுவதற்கான இலங்கையின் அர்ப்பணத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

யு என் டி பி யினால் வெளியிடப்பட்ட இலங்கை தேசிய மானிட அபிவிருத்தி அறிக்கை உள்ளிட்ட இலங்கையில் ஐ நா அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட பல நூல்கள் மற்றும் சஞ்சிகைகளை திரு.நந்தி ஜனாதிபதியிடம் கையளித்தார்.