பதவியேற்பின் பின்னர், அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் ,

செய்திகளை அறியப்படுத்தும் ஊடகவியல் தொழில் என்பது புனிதமானதொரு தொழிலாகும். எனவே அதனை எவ்வித பயமுமின்றி செய்யுங்கள். இனிமேலும் உயர் பதவியிலுள்ளவர்களால் எந்தவொரு ஊடகவியலாளருக்கும் துன்பங்கள், தொல்லைகள் இடம்பெறுவதற்கு இடமளிக்க மாட்டோம்.

முன்னைய ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் பயத்துடனும் அடிமைத்தனமாகவும் தொழில் செய்து வந்தனர். அவ்வாறிருந்தும் பல ஊடகவியலாளர்கள் பயத்தின் காரணமாக உயிரச்சம் கொண்டு தமது தாய்நாட்டினை விட்டு வௌிநாடுகளுக்கு தப்பியோடியுள்ள சம்பவங்களும் உண்டு. இருந்த போதிலும் அவ்வாறானதொரு கடுமையான சூழ்நிலை திரும்பவும் இந்நாட்டில் இடம்பெற இடமளிக்க மாட்டோம்.

அனைத்து ஊடகவியலாளர்களும் நீதியாகவும் சுதந்திரமாகவும் தமது தொழிலை செய்ய முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அத்துடன் ஊடக பயிற்சி நிலையங்களை மேலும் அபிவிருத்தி செய்வதன் மூலம் ஊடகவியல் தொழிலின் தரத்தினை நாம் மேலும் உயர்த்த முடியுமெனவும் தெரிவித்தார்.