இன்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) காலை 10.12 மணிக்கு பிறந்த சுபமுகூர்த்தத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைக்கப்படவுள்ள 8 ஆவது பாராளுமன்றத்தின் புதிய பிரதமராக பதவியேற்றார்.

இம்முறையுடன் இலங்கையின் அரசியல் வரலாற்றில் 4 முறை பிரதமராக பதவியேற்றவர் என்ற பெறுமையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொண்டுள்ளார்.


இதற்கு முன்னர் பிரித்தானிய பிரதமர் வில்லியம் எவார்ட் நான்கு தடவைகள் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டிருந்தார். அந்த சாதனை 121 வருடங்களுக்குபின்னர் இன்று சமன் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.