அத்துடன் தொகுதி வாரியான தேர்தல் முடிவுகள் தேர்தல் தினத்திற்கு மறுநாள் மதியத்திற்கு முன்னர் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று காலை 07 மணிக்கு வாக்களிப்புக்கள் ஆரம்பமாகி பிற்பகல் 04 மணி வரை நடைபெறும். நாடளாவிய ரீதியில் 12,314 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 1,600 வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சுமார் 195,000 அரசாங்க உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். அவற்றுள் 125,000 உத்தியோகத்தர்கள் வாக்களிப்பு நிலையங்களிலும், 70,000 உத்தியோகத்தர்கள் வாக்கு எண்ணும் நிலையங்களிலும் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் விருப்பு வாக்குகளின் முடிவு செவ்வாய் இரவு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.