இன்று நள்ளிரவிற்கு பின்னர் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டத்திற்கு முரணானது எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஆணையாளர், இன்று நள்ளிரவின் பின்னர் தேர்தல் வேட்பாளர்கள் தமது மாவட்டத்திற்குள் ஒரு தேர்தல் பிரசார அலுவலகமொன்றினூடாக மாத்திரமே தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று (14) நள்ளிரவுடன் நிறைவடைய வேண்டும் என அறிவுறுத்திய பின்னரும் தேர்தல் சட்ட விதிகளை மீறி சட்ட விரோதமாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து கட்சியின் செயலாளர்களிடமும் , பிரசார நடவடிக்கைகள் தொடர்பான பதாகைகள், கட்அவுட்ஸ், சுவரொட்டிகளை அகற்றுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தல்கள் வழங்கியும் நாளை (15) சனிக்கிழமை காலை 08 மணி வரை அகற்றப்படாத பதாதைகள் சுவரொட்டிகள் அனைத்தும் அகற்றும் பணிகளில் பொலிஸார் ஈடுபடுவர் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.