நேற்று (04) வெகுசன ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பெல்லன்வில ராஜமகா விகாரையில் ஆரம்பமாகும் இந்த பெரஹராவுக்கான சகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன. தேவதூத பெரஹரா, கும்பல் பெரஹரா எதிர்வரும் 08 ஆம் திகதியும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெரஹரா எதிர்வரும் 09 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதி வரையும், பவதா பெரசரா எதிர்வரும் 13 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறவுள்ளது. ரன்சிவிலி பெரஹரா 14 ஆம் திகதியும் ரன்தோலி பெரஹரா 15 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

பெரஹரா நிறைவுடன் அன்னதான நிகழ்வுகள் இறுதித்தினமான ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெறும். அத்துடன் எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு ஊர்வலத்துக்கென தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசம் மிகவும் குறுகிய இடத்துக்குள் தெரிவு செய்துள்ளோம்.

அவ்வகையில் பெல்லன்வில விகாரையிலிருந்து ஆரம்பமாகும் பெரஹரா தெஹிவல – மஹரகம பிரதான பாதை வழியாக பெல்லன்வில சிறி சோமரத்ன மாவத்தை ஊடாக விகாரை மாவத்தை வழியாக வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கண்டி தலதா மாளிகையில் நடைபெறும் ரன்தோலி பெரஹரவுக்கு அடுத்த படியாக சிறப்புக்குரியதாகக் கருதப்படக் கூடிய பெரஹரா பெல்லன்வில எசெல ரன்தோலி பெரஹரா என்பது விசேட அம்சமாகும்.