மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் மிக முக்கிய குறிப்புரையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றவுள்ளார். நடைபெறவுள்ள குழு கலந்துரையாடல்களின் பிரதிநிதிகளாக வௌிவிவகார அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரும் கலந்து கொள்வர் .Â

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சுரேஷ் ஷாக் கலந்துரையாடல்களில் மிக முக்கிய பணியாற்றவுள்ளார். "50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏற்றுமதியை நோக்கி" என்ற தொனிப்பொருளில் அமைந்துள்ள இம்மாநாடு 08 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு இரண்டு நாட்களாக நடைபெறவுள்ளது.Â

இடம்பெறவுள்ள 08 பிரிவுகளும் குறிப்பிட்ட தலைப்புக்களின் கீழ் கலந்துரையாடப்படவுள்ளது. 'தேசிய பார்வை : கொள்கை செயல்படுத்துதல் மற்றும் முன்னோக்கு', 'இலங்கைக்கான புதிய சர்வதேச பொருளாதார தந்திரோபாயம்', ' ஏற்றுமதியில் சமூக ஊடகங்களின் பாவனையும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பங்கும்', நிதி ஏற்றுமதி வர்த்தகத்திலுள்ள சவால்களும் சந்தர்ப்பங்களும்', விவசாய ஏற்றுமதியில் பெறுமதி கூட்டுதல்', ஏற்றுமதி வளர்ச்சியில் நிலையான தன்மை', ஏற்றுமதி தொடர்பான அறிவுப் பரிமாற்றங்கள்' ஆகிய 08 தலைப்புக்களில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

மாநாட்டின் நிறைவுப் பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிறப்புரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.