சிறந்த ஊடகக் கலாசாரத்தை ஏற்படுத்தி ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான காத்திரமான சூழலை ஏற்படுத்த உச்சளவில் நடவடிக்கை எடுக்கப்போவதாக புதிய ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஊடகவிய லாளர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத அச்சுறுத்தல் நிலவியதைக் குறிப்பிட்ட அமைச்சர், இதன் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த ஊடகவியலாளர்களை மீள தாய் நாட்டுக்கு வருமாறும் அமைச்சர் அழைப்பு விடுத்தார். திரைப்படக் கூட்டுத்தாபனத்தை முன்னேற்றி சினிமாத்துறையையும் கலைஞர்களையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.