மலையகத்தில் சில அமைச்சர்கள் மலையக மக்களுக்கு பணம், தகரங்கள், மின் அழுத்திகள் போன்றவற்றை கொடுத்து ஏமாற்றலாம் என நினைத் தார்கள். ஆனால் மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்துள்ளனர் என்று தெரி வித்த தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி. திகாம்பரம் மலையகத்தில் 100 நாட்களுக்குள் மாபெ ரும் மாற்றத்தை ஏற் படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.