ரஷ்யாவில் நடைபெற்ற 18வது கசான் சர்வதேச முஸ்லிம் திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட "நியூஸ் பேப்பர்" திரைப்படத்திற்காக கிடைத்த விருதுகளுடன் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (15) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இதன் இணை தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு அமைச்சர் பந்துல குணவர்தன பங்களிப்பு வழங்கியுள்ளதுடன். இந்த விருது வழங்கும் விழாவில் குமார திரிமதுர மற்றும் சரத் கொத்தலாவல சிறந்த நடிகருக்கான இணை விருதை வென்றனர். இந்த படத்தின் இணை இயக்குனர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் என இந்த இருவரும் பங்களித்துள்ளனர்.