பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96ஆவது வயதில் காலமானார்.

பிரிட்டனின் 70 ஆண்டு முடியாட்சியை மேற்கொண்ட மகாராணி இரண்டாம் எலிசபெத் ,நேற்று (08) காலமானார். இறக்கும் போது அவருக்கு 96 வயது.

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில், ராணியின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளுக்காகக் காத்திருந்த மக்கள், அவரது மரணத்தைக் கேள்வியுற்றதும் அவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்

இந்நிலையில் அரண்மனையின் உச்சியில் இருந்த யூனியன் கொடி பிரிட்டன் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 6.30 மணிக்கு அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர் (Elizabeth Alexandra Mary Windsor), லண்டனில் உள்ள மேபயார் (Mayfair) நகரில் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி பிறந்தார். 1952இல் அரியணைக்கு வந்த அவர், 70 ஆண்டுகளாக அரியாசனத்தில் இருந்தார்.

இவர் இங்கிலாந்திற்கு மட்டுமின்றி 14 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி அரசியாகவும் உள்ளார். ராணி 2-ம் எலிசபெத்

இங்கிலாந்து பிரதமர் தேர்வில் முக்கிய பங்கு வகித்தார். ஒவ்வொரு முறை இங்கிலாந்திற்கு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும்போது அதில் ராணி 2-ம் எலிசபெத்தின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

ராணி 2-ம் எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு உயிரிழந்தார். பிலிப் - எலிசபெத் தம்பதிக்கு 3 மகன்கள் 1 மகள் என 4 பேர் உள்ளனர். ராணி 2-ம் எலிசபெத் நேற்று உயிரிழந்ததையடுத்து அவரது மூத்த மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

நீண்டகாலம் ஆட்சி செய்த நபர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல், உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த 2-வது நபர் என்ற பெருமையை ராணி 2-ம் எலிசபெத் பெற்றுள்ளார். பிரான்ஸ் மன்னராக செயல்பட்ட 14-ம் லுயிஸ் உலகின் நீண்டகால மன்னராக செயல்பட்டார்.

1643 ஆண்டு மே 14 ஆம் திகதி முதல் 1715 செப்டம்பர் 1 ஆம் திகதி வரை 14-ம் லுயிஸ் மன்னராக ஆட்சி செய்தார். 72 ஆண்டுகள் 110 நாட்கள் ஆட்சி செய்த 14-ம் லுயிஸ் உலகின் நீண்ட நாட்கள் ஆட்சி செய்தவர்  என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.