இலங்கையில் முதல் அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தபால் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம்  2022 செப்டெம்பர் 01அன்று இலங்கை பாராளுமன்றத்தில் நினைவு அஞ்சல் அட்டையை வெளியிட ஏற்பாடு செய்துள்ளது.

1872 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இலங்கையின் முதலாவது தபால் அட்டையின் 150 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் 1872 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தபால் அட்டையின் புகைப்படத்துடன் கூடிய இந்தப் புதிய அஞ்சல் அட்டையை வெளியிடப்படவுள்ளது.

1872 ஆம் ஆண்டில், இந்த அஞ்சல் அட்டை 02 rjk; ngWkjpAld; விக்டோரியா மகாராணியின் மேல் உடலை சித்தரிக்கும் முத்திரை தலையுடன் வெளியிடப்பட்டது மற்றும் 20 ரூபாய் முகமதிப்புடன் புதிய அஞ்சல் அட்டை வெளியிடப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முத்திரை சேகரிப்பாளர்களுக்காக இந்த நினைவு அஞ்சல் அட்டையுடன் கூடிய சிறப்புப் பொதியை (கோப்புறை) குறைந்த எண்ணிக்கையிலான பிரதிகளில் வெளியிடவும் தபால் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.