17 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் இன்று (18) முற்பகல் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

இதில் டக்ளஸ் தேவானந்தா, அவர் ஏற்கனவே வகித்த மீன்பிடி அமைச்சராக மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுற்றாடல் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அண்மையில் அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்த நிலையில், மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்த அலி சப்ரி, ஜீ.எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெனாண்டோ ஆகியோரில், ஜோன்ஸ்டன் பெனாண்டோ வகித்த அமைச்சு பதவி கனக ஹேரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்திற்கு பேச்சுவார்த்தைக்காக சென்றுள்ள நிலையில், அவர்களது அமைச்சுகளில் மாற்றங்கள் இல்லை என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தற்போது பிரதமர் உள்ளிட்ட 20 பேர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

01. திரு. தினேஷ் குணவர்தன            - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்  மற்றும் உள்ளூராட்சி               

02. திரு. டக்ளஸ் தேவானந்தா                             - கடற்றொழில் அமைச்சு

03. திரு. ரமேஷ் பத்திரன                                       - கல்வி, பெருந்தோட்டக் கைத்தொழில்

04. திரு. பிரசன்ன ரணதுங்க                                 - பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுலா

05. திரு.திலும் அமுனுகம                                       - போக்குவரத்து, கைத்தொழில்

06. திரு கனக ஹேரத்                                              -  நெடுஞ்சாலைகள்

07. திரு.விதுர விக்கிரமநாயக்க                           - தொழில் அமைச்சு

08. திரு.ஜானக வக்கும்புர                                       - விவசாயம், நீர்ப்பாசனம்

09. திரு.ஷெஹான் சேமசிங்க                               - வர்த்தகம், சமுர்த்தி அபிவிருத்தி

10. திரு. மொஹான் பிரியதர்ஷன டி சில்வா    - நீர் வழங்கல்

11. திரு. விமலவீர திஸாநாயக்க                           - வனவிலங்கு மற்றும் வன வளப் பாதுகாப்பு

12. திரு. காஞ்சன விஜேசேகர                                 - வலுசக்தி, மின்சக்தி

13. திரு. தேனுக விதானகமகே                               - இளைஞர் மற்றும் விளையாட்டு

14. திரு. நாலக கொடஹேவா                                - வெகுசன ஊடக அமைச்சு

15. திரு. சன்ன ஜெயசுமன                                     - சுகாதாரம்

16. திரு. நசீர் அஹமட்                                             - சுற்றுச்சூழல்

17. திரு. பிரமித பண்டார தென்னகோன்           - துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை