100 வருடங்கள் பழமையான திட்டத்தின்படி முழுமையாக புனரமைக்கப்பட்ட கொழும்பு பிளவர்  வீதியில் 'சிறிமதிபாய' பிரதமர் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதை ஒட்டி நினைவு முத்திரை வெளியிடப்பட்டது.

வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இந் நினைவு முத்திரை கையளிக்கப்பட்டது.

ஆல்பர்ட் இம்மானுவேல் டி சில்வாவினால் அவரது மகன் சர் ஆல்பர்ட் ஏர்னஸ்ட் டி சில்வாவிற்காக 1916 ஆம் ஆண்டு இரண்டு அடுக்கு மாளிகை கட்டப்பட்டதுடன் அவரது மரணத்திற்குப் பிறகு 1960 இல் அவரது குடும்ப உறுப்பினர்களால் இக்கட்டிடம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அக்காலத்தில் கல்வி மற்றும் வானொலி அமைச்சு, உள்ளூராட்சி மற்றும் வீடமைப்பு அமைச்சு சிறிமதிபாயவில் நிறுவப்பட்டதுடன், 1978 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாச அவர்கள் சிறிமதிபாயவில் பிரதமர் அலுவலகத்தை நிறுவினார்.

இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்,ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பிரதமரின் முன்னாள் செயலாளர்கள், அரச அதிகாரிகள், அல்பேர்ட் ஏர்னஸ்ட் டி சில்வாவின் உறவினர்கள் ஆகியோர் இச்சந்தர்ப்பத்திற்கு கலந்துகொண்டனர்.