அரசாங்க ஊழியர்களுக்கு நேற்று முதல் ஒவ்வொருமாதமும் ரூபா 5000 கொடுப்பனவை வழங்குவதற்கு நேற்று (03) அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக நிதி அமைச்சர் பேசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக சமூர்தி பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூபா 3500 க்கு மேலதிகமாக ரூபா 1000 மேலதிக கொடுப்பனவாக வழங்கப்படவிருப்பதாகவும் நிதி அமைச்சர் கூறினார்.

ஊனமுற்ற படைவீரர்களுக்காகவும் இந்த ரூபா 5000 வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துளள்து.

இதற்கு மேலதிமாக அத்தியாவசிய அபாருட்கள் மீது விதிக்கப்பட்ட மேலதிக வரிகளையும் நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,

அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கு இம்மாதம் முதல், ஒரு வருடத்திற்கு மாதாந்தம் ரூ. 5,000 விசேட கொடுப்பனவு (ரூ. 87 பில்லியன் மேலதிக ஒதுக்கீடு)
ஓய்வூதியதாரர்களுக்கு இம்மாதம் முதல், ஒரு வருடத்திற்கு மாதாந்தம் ரூ. 5,000 விசேட கொடுப்பனவு (ரூ. 40 பில்லியன் மேலதிக ஒதுக்கீடு)
தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் இதே மட்டத்திலான சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது தொடர்பில் உரிய தரப்பினரிடம் பேச தொழில் அமைச்சுக்கு ஆலோசனை

சமூர்தி பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூபா 3500 க்கு மேலதிகமாக ரூபா 1000 மேலதிக கொடுப்பனவு

அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களும் அனைத்து வரிகளிலிருந்தும் நீக்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு கிலோ ரூ. 80 வீதம், மாதாந்தம் 15 கிலோகிராம் கோதுமை மா
ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு இம்மாதம் முதல் ரூ. 5,000 கொடுப்பனவு

விவசாயத்துறையை மேம்படுத்த, 20 பேர்ச் நிலத்திற்கு குறைவான வீட்டுத் தோட்டத்திற்கு ரூ. 5,000 கொடுப்பனவு; 20 - 01 ஏக்கர் நிலத்திற்கு ரூ. 10,000 கொடுப்பனவு

நெல்லின் கொள்வனவு உத்தரவாத விலை ரூ. 50 இலிருந்து ரூ. 75 ஆக அதிகரிப்பு

அதிபர்கள், ஆசிரியர்களுக்கான அதிகரித்த சம்பளத்தையும் இம்மாதம் வழங்க  அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.