வெகுஜன ஊடக அமைச்சிக்கு புதிதாக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அனுஸ பெல்பிட இன்று (03)  வெகுஜன ஊடக அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கணக்காய்வு திணைக்களத்தின் கணக்காய்வாளராக அரச சேவையில் இணைந்துக்கொண்ட இவர் ,இலங்கை நிர்வாக சேவையில் கடமையாற்றினார். நிறுவாக சேவை காலப்பகுதியில் ஒன்றிணைந்த உதவி பணிப்பாளராகவும் ஜனாதிபதியின் உதவி செயலாளராகவும், ஜனாதிபதி நிதியத்தின் கணக்காளராகவும் பணியாற்றியுள்ளார்.

இதேபோன்று தேசிய லொத்தர் சபையின் பணிப்பாளராகவும், பதில் கணக்காளராகவும் பணியாற்றியதுடன், இலங்கை ரூபவாஹினி கூடுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகமாவும், அரச தகவல் திணைக்களத்தில் பிரதி பபணிப்பாளராகவும், பணிப்பாளர் மற்றும் முதலாவது பணிப்பாளர் நாயகமாவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தானத்தின் தலைவராகவும், லங்க புவத் நிறுவனத்தின் தலைவராகவும், செலசினே நிறுவனத்தின் உயர் அதிகாரியகவும் பதவி வகுத்துள்ளார்.

இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த திரு அனுஸ பெல்பிட ஸ்ரீ ஜெயவர்தன புர பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பட்டதாரியுமாவார்.

2003, 2004 ஆம் ஆண்டுகளில் அவுஸ்ட்ரேலியா விக்டோரியா பல்கலைக்கழகத்தின் தொழில் ரீதியிலான கணக்காய்வு முதுமாணி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி கைத்தொழில் அமைச்சின் செயலாளராக நியமிகக்ப்பட்டதுடன் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக பதவி வகுப்பதற்கு முன்னர் பொருளாதார கொள்கை மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளராகும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெகுஜன ஊடக அமைச்சியின் புதிய செயலாளர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட இந்த நிகழ்வில்  ,வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் S.R.W.M.R.P . சத்குமார ,மேலதிக செயலாளர் (அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்) எச். ஹெவகே ,அரச தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு உட்பட்ட நிறுவனங்களின் பிரதானிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.