இலங்கையில் 2023ஆம் ஆண்டு பாடசாலைக் கல்வித் திட்டத்தில் சட்ட பாடவிதானம் உள்ளடக்கப்படவுள்ளது. 2023ஆம் ஆண்டு முதல் இது அமுற்படுத்தப்படும் வகையில் கல்வி பாடவிதானத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இது விடயம் குறித்து தகவல்கள் மற்றும் கருத்துக் களைச் சேரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கும் நோக்கில் பாராளுமன்ற உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தேசிய கல்வி நிறுவகத்தோடு இணைந்து இதுவிடயம் குறித்து ஆராயும் என, திறந்த பல்கலைக்கழகம், தொலைக்கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி உபாலி எம்.சேதர தெரிவித்தார். ஐந்தாம் ஆண்டில் இருந்து 11ஆம் ஆண்டுவரை உள்ள பாடத்திடடத்திலும் பொருத்தமான மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.