நாட்டிலுள்ள, 200 மாணவர்களை விட குறைந்த பாடசாலைகளை நாளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு இலவசக் கல்வியை தொடர்வதற்கான சூழலை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் பெற்றோரின் பங்களிப்போடு மேற்கொள்ளப்படுகின்றன. பாடசாலைகளுக்குச் சென்று கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க ஜனாதிபதியும் பிரதமரும் உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். காய்ச்சல் தடிமன் சளி போன்ற அடையாளங்கள் காணப்படும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்று கல்வி அமைச்சு பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.